Published:Updated:

முத்துமலை முருகன் கும்பாபிஷேகம்: 146 அடி உயரம் கொண்ட உலகத்தின் பிரமாண்டமான முருகன் திருமேனி!

முத்துமலை முருகன்

உலகின் பிரமாண்டமான முருகன் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும் பணி 2016-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 3 வருட காலமாகத் தீவிரமாக நடந்த இந்தத் திருப்பணி விரைவில் தற்போது முடிவடைந்து நாளை (ஏப்ரல் 6) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

முத்துமலை முருகன் கும்பாபிஷேகம்: 146 அடி உயரம் கொண்ட உலகத்தின் பிரமாண்டமான முருகன் திருமேனி!

உலகின் பிரமாண்டமான முருகன் திருமேனியைப் பிரதிஷ்டை செய்யும் பணி 2016-ம் ஆண்டு தொடங்கியது. கடந்த 3 வருட காலமாகத் தீவிரமாக நடந்த இந்தத் திருப்பணி விரைவில் தற்போது முடிவடைந்து நாளை (ஏப்ரல் 6) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

Published:Updated:
முத்துமலை முருகன்

சேலம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது முத்துமலை முருகன் திருத்தலம். இங்கு 2015-ம் ஆண்டு பிரமாண்ட முருகனின் திருமேனியை நிறுவத் திட்டமிட்டு 2016-ம் ஆண்டு முதல் திருப்பணி தொடங்கியது. இத்திருப்பணி தற்போது முடிவடைந்து நாளை ஏப்ரல் 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதற்கான யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளை மிஞ்சும் விதாமாக, இத்திருத்தலம் சேலத்துக்கு அருகே எழுத்தருளியுள்ளது. சுமார் 146 அடி உயரம் கொண்டு எழுந்தருளியுள்ள முருகனின் சிலை காண்போரை பிரம்மிக்க வைக்கிறது. உலகளவில் பார்க்கும்போது முருகனுக்காக அமைக்கப்பட்ட திருமேனிகளில் இதுவரை மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் திருமேனி மிகப் பெரியதாக இருந்தது. அதன் உயரம் 140 அடி.

முத்துமலை முருகன்
முத்துமலை முருகன்

தற்போது முத்துமலையில் பிரதிஷ்டை செய்யப்படும் இந்த முருகனின் திருமேனி அதைவிட 6 அடி உயரம் பெரியது. அதுமட்டுமல்லாது மலேசியாவில் உள்ள முருகனை வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதியே இந்தத் திருக்கோயிலையும் எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டத் திருமேனியராக முருகப்பெருமான், ஒரு கையில் வேலும் மற்றொறு கையில் ஆசீர்வாதம் செய்வதுபோன்றும் திருக்கோலம் கொண்டுள்ளார்.

மலேசிய முருகனுக்கும், இங்குள்ள முருகனுக்கும் பல மாற்றங்கள் உள்ளன. சுவாமியின் திருமேனியில் தங்ககவசம் சாற்றப்பட்டுள்ளது. சுவாமி பஞ்சவர்ண நிறத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். ஒரே நேரத்தில் 5 லட்சம் பேருக்கு தரிசனம் வழங்கும் விதமாக இந்த முருகன் எழுந்தருளியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இங்கு பக்தர்களுக்கான சிறப்பம்சமாக முருகனின் திருமுகத்தை அருகில் சென்று பார்க்க நினைப்போர், பாலாபிஷேகம் செய்ய நினைப்போர்களுக்கு முருகன் வேலினுக்கு பின்புறம் லிஃப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முருகன் கையில் அமைந்துள்ள வேலினுள் மற்றொரு வேல் மேலே அமைக்கப்பட்டுள்ளது. பாலாபிஷேகம் செய்வோர் அதில் செய்துகொள்ளும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

முத்துமலை முருகன்
முத்துமலை முருகன்

இதுகுறித்து கோயிலை உருவாக்கிய ஸ்ரீதரிடம் பேசினோம்,

“இந்த கோயிலின் திருப்பணியானது 2016-ல் என்னுடைய தந்தை முத்து நடராஜன் அவர்களால் தொடங்கப்பட்டது. அவர் தீவிர முருக பக்தர். ஒருமுறை மலேசிய சென்றிருந்தபோது தமிழ் கடவுளான முருகனுக்கு சிலை அங்கு இருப்பதைப் பார்த்து, உள்ளம் நெகிழ்ந்துபோய் தமிழ்நாட்டில் இதுபோன்ற சிலை அமைக்க வேண்டுமென்று மலேசிய முருகனை வடிவமைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாரூர் தியாகராஜன் அவர்களிடம் பேசி இங்குள்ள முருகனையும் வடிவமைத்துதரக் கூறி தற்போது 100 சதவீத வேலை நடந்து முடிந்துள்ளது. மிகத் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள முருகருடைய திருமேனி குழந்தை வடிவில் சிரித்த முகத்தோடு பக்தர்களுக்கு நேரில் வந்து காட்சி அளிப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேகத்திற்குப் பிறகு தினசரி அன்னதானம், சுவாமி புறப்பாடு, திருவிழாக்கள் ஆகியன தொடர்ந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இனி தமிழகத்தின் முக்கியமான ஆன்மிகத் தலமாக இந்த முருகன் கோயில் விளங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism