Published:Updated:

ஆயுளை நீட்டிக்க உதவும் அற்புத யோகப் பயிற்சிகள்... நீங்களும் பங்கேற்கலாம்!

அற்புத யோக - வர்மப் பயிற்சிகள்
அற்புத யோக - வர்மப் பயிற்சிகள்

சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, ஆயுளை நீட்டிப்பது என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். மற்ற விலங்குகளில் இது சாத்தியமில்லை. ஏன், மனிதன் மட்டுமே சிந்தனையில் தேர்ச்சி பெற்று இறை நிலையை எட்ட முடியும் என்ற ஆன்ம நிலைக்கு வர முடிந்தவன்.

உணவு, காற்று, அறிவு, மனம், இறை உணர்வு எனும் இந்த ஐந்தும் கூடி கலந்து உறவாடி நலம் தேடித் கொண்டிருப்பதுதான் உடலாகும். இதை நலமோடு வைத்திருப்பதே நம் முதல் கடமை. சுவாசம் எனும் மூச்சே நம் உயிரை இயக்கும் முக்கியக் காரணியாக விளங்குகிறது. ஒரு நிமிடத்துக்கு சுமார் 15 முதல் 18 முறை சுவாசிக்கிறோம். இதில் எந்த அளவுக்கு ஆழ்ந்து அகன்று சுவாசிக்கிறோம் என்பதில் நமக்கு அக்கறையே இல்லை, சுவாசம் ஆழ்ந்து குறையக் குறைய நம் ஆயுள் நீடிக்கிறது என்கின்றன சித்தர்களின் நூல்கள்.
யோகா
யோகா

ஆழ்ந்து முறையாக சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்குள் நுழைந்து ரத்தக் குழாய்களுக்குக் கொடுக்கப்பட்டு ஆற்றலாகிறது. பிறகு மீதமான காற்று கரிமிலவாயு காற்றாக வெளியேற்றப்படுகிறது.மனித ஆற்றலுக்கு ஆதாரமாய்த் திகழும் சுவாசக் காற்றே உடலில் ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுவாசத்தில் உருவாகும் பிராணன் உடலின் இயக்கமாகவும், நரம்பில் ஓட்டமாகவும், இதயத் துடிப்பாகவும், நுரையீரல் விரிந்து சுருங்கவும், சுரப்பிகள் சுரப்பதற்கும், உணவு செரிப்பதற்கும், கழிவுகள் வெளியேற்றப்படவும், எண்ணத்தின் போக்குக்கும், வலிமைக்கும் காரண, காரியமாகவும் விளங்குகிறது. ஒருவர் உடலில் பிராணசக்தி குறைந்து போனால் ஆரோக்கியமும் குறைந்துவிடும் எனலாம்.

சுவாசத்தைக் கட்டுப்படுத்தி, ஆயுளை நீட்டிப்பது என்பது ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும். மற்ற விலங்குகளில் இது சாத்தியமில்லை. ஏன், மனிதன் மட்டுமே சிந்தனையில் தேர்ச்சி பெற்று இறை நிலையை எட்ட முடியும் என்ற ஆன்ம நிலைக்கு வர முடிந்தவன். 1,000 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம் என்ன செய்து கொண்டிருந்ததோ அதையே இன்னமும் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் மனிதன் அப்படி இல்லை. அவன் ஆன்ம, அறிவியல் வளர்ச்சியில் முன்னேறி வந்துள்ளான். புவி ஈர்ப்பு விசையை மீறி எழுந்து நிமிர்ந்த மனிதன், தான் இழந்து போன ஆயுளை மீண்டும் பெற முடியும் என்பதை உணர வேண்டும்.

யோகா
யோகா

நாம் சுவாசிக்கும்போது காற்றிலுள்ள பிராண வாயுவை மட்டுமின்றி, எங்கும் நிறைந்து நிற்கும் பிரபஞ்ச சக்தியையும் சேர்த்தே உள்ளே இழுக்கிறோம். அது சுவாசத்தோடு கலந்து உடல் முழுவதும் சென்று எல்லா நாடி நரம்புகளையும், உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் நலமாகிறது.

தொற்று நோய்கள் நம்மைத் தொடர்ந்து அச்சுறுத்தும் இந்த வேளையில் பிராண வாயுவை அதிகரிக்கும் யோக நிலைகள், மூச்சுப் பயிற்சிகள், வர்மப் புள்ளிகளை இயக்கும் முறைகள், அதோடு நுரையீரலை சுத்தப்படுத்தும் முறைகள், நோய்த்தொற்றைத் தடுக்கும் மூலிகைகளின் பயன்கள், வாய்க் கொப்பளிக்கும் விதங்கள், பாதுகாப்பான உணவுகள், பான வகைகள் என பல்வேறு ஆரோக்கிய வழிமுறைகளை சக்தி விகடன் வாசகர்களாகிய நீங்கள் இந்த பயிற்சி வகுப்பில் கற்றுக் கொள்ளலாம்.

பிராண வாயுவை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும் இணைய வழியிலான இந்த எளிய யோக - வர்மப் பயிற்சி வகுப்பு வரும் ஜூன் 6-ம் தேதி காலை 7.00 - 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சியினை நமக்கு வழங்க இருக்கிறார் உலக சித்தக் கலைகள் ஆய்வு மையத்தின் தலைவர் மு. அரி. இவர், வர்மக்கலை மற்றும் தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் முதலானவற்றைப் பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். அனுபவம் மிக்க இந்த ஆசான் வழங்கும் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

யோகா குரு மு. அரி
யோகா குரு மு. அரி

இந்தப் பயிற்சியின் பலன்கள்:

இப்பயிற்சியில் மற்ற பிராணாயாம பயிற்சியைவிட உயிராற்றல் அதிகமாக உற்பத்தியாகிறது.

மேலம் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நம் உணர்வுகளைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவுகிறது. அதனால் உணர்வுகளின் மூலம் உயிராற்றல் செலவாகாமல் இருக்கிறது.

முறையான சுவாசப் பயிற்சியால் நுரையீரல் தூய்மையாகி, உள்ளே செல்லும் பிராண வாயுவின் அளவு அதிகரிக்கும்.

பிராண வாயு அதிகரிப்பதால் உடல் ஆற்றல் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி தாமாகவே உருவாகும்.

உடலுக்கும் மனதுக்கும் உற்சாகத்தை உருவாக்கும் வர்ம, யோகப் பயிற்சிகளால் உங்களுக்குள் நேர்மறை எண்ணங்கள் உருவாகி உங்களை வெற்றியாளர் என்ற நிலைக்கு உயர்த்தும்.

வாசகர்களின் கவனத்திற்கு:

இங்கு அளிக்கப்படும் ஆலோசனைகள், மூலிகைகள் உங்களுக்கு ஏற்றவையா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்த பிறகே எடுத்துக் கொள்ளவும்.

உடல் நிலைக் கோளாறு கொண்டவர்கள் குருவிடம் கேட்டுக்கொண்ட பிறகே பயிற்சியை அல்லது மூலிகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சிகள் அதிகாலையில் அல்லது காலை 6 மணிக்குள் நல்ல மனநிலையில் இனிய சூழலில் மேற்கொள்ள வேண்டும்.

காலை உணவு எடுத்துக்கொள்ளாமல் செய்வதே நல்லது.

பயிற்சியின்போது உடைகள் தளர்வாக இருப்பது நலம்.

நாள்: 6.6.2021

நேரம்: காலை 7 மணி முதல் 8.30 மணி வரை

தொடர்புக்கு - 8939030246

நீங்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற இங்கே க்ளிக் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு