Published:Updated:

பிணிக்கு மருந்தே!

மகா பெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவர்

ஓவியம்: ம.செ

பிணிக்கு மருந்தே!

ஓவியம்: ம.செ

Published:Updated:
மகா பெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
News
மகா பெரியவர்

வீட்டின் சமையலறையில் அனைத்துப் பொருள்களும் இருந்தா லும் தினமும் அங்கு புழங்கும் அம்மாவுக்குத்தான் எது எது எங்கிருக்கும் என்று தெரியும். அதுபோல், சகல பிரச்னைகளுக்குமான தீர்வுகள் நம் வேதங்களிலும், புராணங்களிலும், ஞானநூல்களிலும் நிரம்ப உண்டு. அவற்றில் எந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு எங்குள்ளது என்பதை அன்பர்களுக்குச் சொல்லி வழிகாட்டி அருள்பாலிப்பதில் பரமாசார்யாளுக்கு நிகர் பரமாசார்யாள்தான்.

காஞ்சி 
மகா பெரியவர்
காஞ்சி மகா பெரியவர்

ருமுறை வயதான தம்பதியர் பெரியவாளை தரிசிக்க வந்தார்கள். அவர்களில் அந்தப் பெண்மணிக்குத் தீராத நோய் என்பது பார்க்கும் போதே புரிந்தது. அவர்களைப் பார்த்ததுமே பெரியவா, “இந்த நோய்க்கு மருந்து மாத்திரையோட ஒரு மந்திரமும் சொல்லணும்” என்று சொல்லி ஒரு ஸ்லோகத்தை எடுத்துச்சொன்னார். அதைத் தினமும் 108 முறை சொல்லி வழிபடும்படியும் அனுகிரஹித்தார்.

நாராயணீயத்தில் வரும் அந்த ஸ்லோகம் வருமாறு.

அஸ்மின் பராத்மன் நனு பாத்மகல்பே
த்வமிதமுத்தாபித பத்மயோனிஹி
அனந்த பூமா மமரோக ராஷிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ


கருத்து : பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே! பத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனே, அளவற்ற மகிமை உடையவனாகிய நீயே, என் உடல், மனம் சார்ந்த எல்லா நோய்களையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.

நான்கு மாதங்கள் கழித்து மகாபெரியவாளை தரிசிக்க வந்த அந்தப் பெண்மணி நோய் முற்றிலும் குணமாகிவிட்டதாகத் தெரிவித்து, சுவாமியைப் பணிந்து வணங்கி ஆசிபெற்றுச் சென்றார்.

மகாபெரியவா எடுத்துச்சொன்ன அந்த ஸ்லோகம் அந்தத் தம்ப திக்கு மட்டுமல்ல, நம் எல்லோருக்குமே அருமருந்தாக அருள வல்லது. நாமும், கொரொனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து விரைவில் மீளவும் நம் தேக ஆரோக்கியம் சிறக்கவும் வேண்டி, அனுதினமும் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு, குருவாயூரப்பனின் திருவருளைப் பெறுவோம்.

- சக்திதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism