Published:Updated:

"ராமாநுஜர், மேரி க்யூரி - இருவரின் சித்தாந்தமும் ஒன்றே!"- பேராசிரியர் ராமச்சந்திரன் #WhatSpiritualityMeansToMe

"மனிதனும் மற்ற உயிர்களும் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அப்படி அது சிரமப்படும்போது சென்று உதவுவதும்தான் சிறந்த ஆன்மிகம்."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பேராசிரியர் ராமச்சந்திரன், பட்டிமன்ற நடுவராக பல மேடைகளை அலங்கரித்து வருபவர். அவரின் மனதுக்குப்பட்ட சமூகக் கருத்துகளை எந்தவித சமரசமுமில்லாமல் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். அழுத்தமான கருத்துகளை அலட்டல் இல்லாமல் நகைச்சுவையாகச் சொல்லக்கூடியவர். அவரை எனது ஆன்மிகம் பகுதிக்காக சந்தித்தோம். குற்றால அருவியென குளிர்மிக்க கருத்துகளை அருவியாகக் கொட்டினார். அவற்றிலிருந்து...

Happiest Life
Happiest Life

"இந்தியாவைப் பொறுத்தவரை உலக அளவில் அதை `ஆன்மிக பூமி' என்று அழைக்கிறார்கள். `ஆன்மிக பூமி' என்று அழைப்பதற்குப் பெருவாரியான மக்களின் அபிப்பிராயம் என்னவென்றால், `இங்கு நிறைய கோயில்கள் இருக்கின்றன, தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் ஏராளமாக இருக்கின்றன. சித்தர்கள், ஞானிகள் பலரும் இங்கு தோன்றி இருக்கின்றனர்' என்பது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

`ஏராளமான சாதுக்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய மதங்கள் எல்லாம் இங்கு தோன்றியிருக்கின்றன. இப்படித்தான் பலரும் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மதத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்தே பார்க்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது கோயில்கள், மதங்கள் சம்பந்தப்பட்டது என்றே பலரும் நினைக்கிறார்கள். ஆன்மிகம் என்பதில் மதமும் சம்பந்தப்பட்டிருக்கிறதுதான். ஆனால், மதம் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கவில்லை.

பாரதியார்
பாரதியார்

ஆன்மிகத்தை வளர்ப்பதில் கோயில்களுக்கு, ஒரு பங்கு இருக்கிறது, மதத்துக்கு ஒரு பங்கு இருக்கிறது. ஆனால், ஆன்மிகம் என்பது இதைத் தாண்டியும் இருக்கிறது. ஆன்மிகம் மனித நேயத்துடன் தொடர்புடையது. மனித சமூகம் நலமாக வாழ சிந்தித்த அத்தனை பெரியோர்களும் ஆன்மிகவாதிகள்தான்.

மத நம்பிக்கையே இல்லாத காரல்மார்க்ஸ், ஆசையே துன்பங்களுக்குக் காரணம் எனக்கூறிய புத்தர், சீனாவில் வாழ்வியல் சித்தாந்தங்களை உருவாக்கித் தந்த, கன்பூசியஸ், `உன்னையே நீ எண்ணிப்பார்' என்ற கிரேக்கத்தின் சாக்ரட்டீஸ், சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகப் போராடிய பெரியார் என இவர்களும் ஆன்மிகவாதிகள்தான்.

இவர்கள் மதவாதிகள் அல்ல, ஆனால் ஆன்மிகவாதிகள்.

மனிதனும் மற்ற உயிர்களும் சிரமப்படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதும் அப்படி அது சிரமப்படும்போது சென்று உதவுவதும்தான் சிறந்த ஆன்மிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி நினைப்பவர் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும் சரி, இல்லாதவராக இருந்தாலும் சரி அவர் ஆன்மிகவாதி. ராமாநுஜரும் ஆன்மிகவாதிதான் கார்ல் மார்க்சும் ஆன்மிகவாதிதான் இருவருமே மனித சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சிந்தித்தார்கள்.

நாத்திகம், ஆத்திகம், ஆன்மிகம். கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நாத்திகம். கடவுள் நம்பிக்கையுடன் இருப்பது ஆத்திகம்.

தன்னை நம்பி தன்னை உணர்ந்துகொண்டு மற்றவர்களுக்கு உதவுவது ஆன்மிகம். தன்னைப்போல் பிறரை எண்ணுவது ஆன்மிகம். இதைத்தான் நமது வேதம் 'அகம் பிரம்மாஸ்மி' என்று கூறுகிறது.

Ramachandran
Ramachandran

``தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே, ஒரு தந்திரம் ஒன்று சொல்ல வேண்டும் வெண்ணிலாவே'' என பாரதியாரும் நம்முடைய சித்தர்களும் பாடியிருப்பது இதைத்தான்.

கடவுளை அறிவது, உணர்வது ஆத்திகம்.

தன்னை உணர்வது, அறிவது ஆன்மிகம்.

``எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன் என்கிறான் கண்ணபிரான்'' என்று எழுதினார் பாரதியார்.

``பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய், கமலச் செங்கண்

அச்சுதா! அமரர் ஏறே! ஆயர்தம் கொழுந்தே! என்னும்

இச்சுவை தவிர, யான் போய் இந்திரலோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருளானே!

என்று ஆழ்வார் பாடியது ஆத்திகம்.

பாரதியார் பாடியது ஆன்மிகம்.

எல்லா உயிர்களையும் தன்னுயிராக எல்லா உயிர்களிலும் கண்ணனை பார்க்கின்ற மனம் வந்துவிட்டால் அது ஆன்மிகம்.

கண்ணனை தனியாக வைத்துவிட்டு வேண்டுகிறார் ஆழ்வார். எல்லா உயிர்களிலும் கண்ணனை பார்க்கிறார் பாரதியார். முன்னது ஆத்திகம். பின்னது ஆன்மிகம்.

Mary Curie
Mary Curie

`இந்த ஆய்வை நீங்கள் மேற்கொள்ளும்போது உங்களுக்குப் புற்றுநோய் வந்தால், என்ன செய்வீர்கள்? அதற்குரிய வாய்ப்புகள் அதிகம் என்று மேரி கியூரியை மற்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

`புற்றுநோய் வந்து நான் ஒருத்தி மடிந்தாலும், பரவாயில்லை. இந்த மனித சமூகத்துக்கான மருந்தை நான் கண்டுபிடிப்பேன்' என்று பதில் கூறுகிறார் மேரி க்யூரி.

இதே விஷயத்தை ஆன்மிகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் ராமானுஜர், `எனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை, மனித சமூகம் மேம்பட கூடிய மந்திரத்தை நான் அனைவருக்கும் அறிவிப்பேன்' என்று கூறி 'ஓம் நமோ நாராயணாய நமஹ' மந்திரத்தை அறிவிக்கிறார்.

'இந்த மந்திரத்தை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தால் நீ நரகத்துக்குச் செல்வாய் என்று கூறுகிறார்கள். ஆனால், ராமாநுஜர் திருக்கோஷ்டியூர் கோபுரத்தில் ஏறி நின்று, அந்த மந்திரத்தை எல்லோருக்கும் கூறினார்.

``இந்த மந்திரத்தை வெளியில் சொன்னால், உனக்கு நரகம் சித்திக்கும் என்று சொல்லியிருந்தோம். ஆனாலும், இதை நீ வெளியில் சொல்லி இருக்கிறாயே'' என்று கேட்கிறார்கள்.

அதற்கு ராமாநுஜர், "இந்த `ஓம் நமோ நாராயணாய நமஹ' எனும் மந்திரத்தை மனித சமூகம் சொல்லி சொர்க்கத்துக்குச் செல்லும் என்றால், நான் ஒருவன் நரகத்துக்குச் செல்வதில் எந்த ஆட்சேபனையும் எனக்கு இல்லை'' என்று கூறுகிறார்.#

Ramachandran
Ramachandran
``நிபந்தனைகளில்லா அன்புதான் ஆன்மிகமா..?!'' - சியாமளா ரமேஷ்பாபு    #WhatSpiritualityMeansToMe

மேரி க்யூரி கூறிய கருத்தும் ராமாநுஜர் கூறிய கருத்துக்கும் சிந்தனை ரீதியிலும் சித்தாந்தரீதியிலும் எந்தவித வேறுபாடும் கிடையாது.

இரண்டுமே உலக நன்மைக்கான ஒரு செயல்பாடு. எல்லா உயிர்களின் மேம்பாட்டுக்கும் சிந்தித்து செயலாற்றுவதே சிறந்த ஆன்மிகம்'' என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு