Published:Updated:

அதிர்ஷ்டக் காற்று வீசும் புத்தாண்டு... ரிஷப ராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரிஷபம் புத்தாண்டு ராசிபலன்கள்
ரிஷபம் புத்தாண்டு ராசிபலன்கள்

குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள்.

பிறரின் நலனுக்காக எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவும் குணம் உடைய ரிஷபராசி அன்பர்களே...

உங்கள் ராசிக்கு 3 -ம் வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பும் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ராசியை சுக்கிரன் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் கைகூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். பாதியிலேயே நின்ற வீடு கட்டும் பணி தொடங்கி இனிதே முடியும்.

குருபகவான் சஞ்சாரம்

குருபகவான் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கடன்களை அடைப்பீர்கள். சொத்துகள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் சந்தோஷமும் நிலைத்திருக்கும். குடும்பத்தினர் உங்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட கல்யாணம், கிரக பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் நடக்கும்.

இழுபறியாக இருந்த வேலைகளைத் துணிந்து முடிப்பீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

குரு பகவான்
குரு பகவான்

அதிசார குரு

ஆனால் ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 ம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாமல் அடுத்தடுத்து வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். எதிலும் அலட்சியமாக இல்லாமல் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் பாக்கி வைக்காதீர்கள். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் வரும்.

ராசியில் ராகு

இந்த வருடம் முழுவதும் ராசிக்குள் ராகு நிற்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுது கவனம் தேவை. சிலருக்கு தலைவலி, மயக்கம் ,ஆகியன வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மனதை ஒருமுகப்படுத்த யோகா, தியானம் ஆகிய செய்துவாருங்கள். 7 - ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு உறவினர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

அஷ்டம சனி விலகியது... இனி அதிர்ஷ்டமே

சனிபகவான் 9 - ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறக்கிறது. சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கை மனதில் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வி.ஐ.பி கள் அறிமுகம் கிடைக்கும். மகளின் கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்துவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லமுறையில் அமையும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

சனி பகவான்
சனி பகவான்

சுக்கிரன் நீசமடையும் நாள்கள்

உங்கள் ராசிநாதன சுக்கிரன் 7.9.2021 முதல் 3.10.2021 வரை பலவீனமடைவதால் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தேவையற்ற மனஉளைச்சல் அதிகரிக்கும். வீண் பழிச் சொல் வந்து நீங்கும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். வீடு தொடர்பான பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

தொழிலில் இதுவரை இருந்த பின்னடைவுகள் நீங்கும். மாறுபட்ட அணுகுமுறையால் லாபமீட்டுவீர்கள். திடீர் லாபம், பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் ஆகியன கூடிவரும். மருந்து, உணவு, ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிரச்னைகள் நீங்கும்.

அதிர்ஷ்டக் காற்று வீசும் புத்தாண்டு... ரிஷப ராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

உத்தியோகஸ்தர்களே!

இதுவரை எந்த வேலையைத் தொடங்கினாலும் இழுபறி இருந்துவந்ததே, அந்த நிலை மாறும் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும். வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கேற்ற வெகுமதியும் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதாகவும், அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கி உங்களின் அந்தஸ்தை உயர்த்துவதாகவும் வரும் புத்தாண்டு அமையும்.

பரிகாரம்:

சுவாமிமலை முருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழை மாணவனின் கல்விக்கு உதவுங்கள். புகழடைவீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு