Published:Updated:

ஷீரடி சாய் பாபா கோயில்கள்

சென்னையில் முதல்முதலாகத் தோன்றிய சாய்பாபா கோயில் மயிலாப்பூரில் தான் உள்ளது. கபாலீஸ்வரர் கோயிலின் திருக்குளம் எதிரே, மயிலை ரயில் நிலையம் அருகே ஸ்ரீசாய் பாபாவின் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீ சீரடி சாய் பாபா
ஸ்ரீ சீரடி சாய் பாபா

சென்னையில் தோன்றிய சாய்பாபா கோயில்

சென்னையில் முதல்முதலாகத் தோன்றிய சாய்பாபா கோயில் மயிலாப்பூரில் தான் உள்ளது. கபாலீஸ்வரர் கோயிலின் திருக்குளம் எதிரே, மயிலை ரயில் நிலையம் அருகே ஸ்ரீசாய் பாபாவின் திருக்கோயில் அமைந்துள்ளது. 65 ஆண்டுகளாக இருக்கும் இந்த திருக்கோயில் தோன்றிய விதத்தினையும், பெருமைகளையும் காண ஆசைப்பட்டோம். அதன்படி பாபாவின் ஆசியால் கிளம்பவும் தொடங்கினோம்.

காலையிலேயே சென்றுவிட்டோம், ஸ்ரீசாயி கோயிலுக்கு! மயிலை வெங்கடேச அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.

வடக்குப் பார்த்து அமைந்திருந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும் பாபாவின் சந்நிதி. பக்தர்கள், வரிசையில் அமைதியாக நின்று, பாபாவை தரிசித்து வணங்கியபடி வந்தனர். எங்கு பார்த்தாலும் ஜே... ஜே-வென பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டாலும், கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாமல், நிசப்தமாக இருந்தது அந்த இடம். பாபாவிடம் பக்தர்கள் கொண்டிருந்த பூரண பக்திதான் அவர்களை அந்த அளவுக்குக் கட்டுப்பாடாக வைத்திருந்தது.

இன்றைக்கு உலகம் முழுவதும் கோடானு கோடி பக்தர்களைக் கொண்டு, ஒரு மாபெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே நிர்வகித்துக் கொண்டிருக்கும் பாபாவைப் பற்றி, கோயிலைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன், கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே!

உலகிலேயே மகான்களின் ஜனன பூமியாக வும், உலகம் முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தை அள்ளி வழங்கும் அட்சய பாத்திரமாகவும் திகழும் புண்ணிய பூமி இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து எவருக்குமே இருக்கமுடியாது. இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்! அதனால்தான் தியாகைய்யர், 'எந்தரோ மகானுபாவலு, அந்தரிகி வந்தனமு!’ என்று புண்ணிய பாரதத்தில் தோன்றிய அத்தனை மகான்களுக்கும் வந்தனம் செய்திருக் கிறார். அப்படி, மகான்கள் பலர் தோன்றிய நம் நாட்டில், 19-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிர மாநிலம் ஷீர்டியில் தோன்றிய மகான் ஸ்ரீ சாயிபாபா.

பெற்றவர் யார் என்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதபடி, அமைதியான அந்த ஷீர்டி கிராமத்தின் எல்லையில் இருந்த வேப்ப மரத்தின் அடியில், நிஷ்டையில் அமர்ந்திருந்த கோலத்தில்தான், ஷீர்டி மக்கள் அவரை முதன் முதலாகக் கண்டனர்.உலகிலேயே மகான்களின் ஜனன பூமியாக வும், உலகம் முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தை அள்ளி வழங்கும் அட்சய பாத்திரமாகவும் திகழும் புண்ணிய பூமி இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து எவருக்குமே இருக்கமுடியாது. இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்! அதனால்தான் தியாகைய்யர், 'எந்தரோ மகானுபாவலு, அந்தரிகி வந்தனமு!’ என்று புண்ணிய பாரதத்தில் தோன்றிய அத்தனை மகான்களுக்கும் வந்தனம் செய்திருக் கிறார்.

அப்படி, மகான்கள் பலர் தோன்றிய நம் நாட்டில், 19-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிர மாநிலம் ஷீர்டியில் தோன்றிய மகான் ஸ்ரீ சாயிபாபா. பெற்றவர் யார் என்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதபடி, அமைதியான அந்த ஷீர்டி கிராமத்தின் எல்லையில் இருந்த வேப்ப மரத்தின் அடியில், நிஷ்டையில் அமர்ந்திருந்த கோலத்தில்தான், ஷீர்டி மக்கள் அவரை முதன் முதலாகக் கண்டனர்.