சனிப்பெயர்ச்சி - 2020 -23... சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள் - மேஷம்

சனிபகவான் மகர ராசியில் இருக்கும் இந்த மூன்று ஆண்டுகளில் அவர் சஞ்சரிக்கும் செய்யும் நட்சத்திரங்களின் அடிப்படையில் பலன்களைச் சொல்ல முடியும்.
உங்களின் பூர்வபுண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத் திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கர்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்கள் மற்றும் வழக்குகள் வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். அரசு அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.
உங்களின் சுகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்து வந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். வாகனப் பழுது சரியாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், மனக்குழப்பங்கள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

உங்களின் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். எதிர்ப்புகள் குறையும். சகோதரங்களுக்கிடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கும். என்றாலும் து£க்கம் குறையும். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை இக்காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.