Election bannerElection banner
Published:Updated:

கன்னி ராசிக்கு பிரதோஷ வழிபாடு பன்மடங்கு பலனைத் தரும்!

சிவ வழிபாடு
சிவ வழிபாடு

சனிப்பெயர்ச்சி கன்னி ராசி பரிகாரம்

உங்களுக்குச் சனி பகவான் இந்தப் பெயர்ச்சியில் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்குக் கை, கால் வலி, மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். மேலும் சஞ்சாரப்படி குறிப்பிட்ட காலங்களில் காரியத் தடைகள், வீண் அலைச்சல்கள் வரக் கூடும். நீங்கள் பிரதோஷ காலத்தில் நந்திதேவருக்குக் காப்பரிசி சமர்ப்பித்து வழிபடுங்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி, முன்னேற்றம் புலப்படும்.

உத்திர நட்சத்திரம் 2,3,4-ம் பாதத்தைச் சேர்ந்தவர்கள் கன்னி ராசிக்காரர்களாவர். இவர்களது ராசிக்கு 5-ல் சனி பகவான் அமைவது நல்ல இடம் ஆகாது. ஆனால் இதற்கு முன்பு இருந்த அர்த்திராஷ்டமத்தை விட சிறந்த இடம். எனவே கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். செலவு செய்வதற்கு முன்பாக யோசித்துச் செய்ய வேண்டியது அவசியம். தீய வழிகளைச் சிந்திக்காமலும் அவ்வழிகளில் செல்லாமலும் இருப்பதன் மூலம் உங்கள் அறிவையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். உத்திர நட்சத்திரம் கன்னி ராசிக்காரர்கள் சிவ வழிபாடு செய்வது மிகவும் அவசியம்.

அஸ்தம்: சாஸ்தாவை அதிதேவதையாகக் கொண்ட அஸ்த நட்சத்திரம் விநாயகரின் அவதார நட்சத்திரமாகும். ராசிக்கு ஐந்தில் குருபகவான் அமர்வதும் குருவின் பார்வை கன்னி ராசியைப் பார்ப்பதும் மிகுந்த நல்ல நிலையாகும். எனவே 5- ம் இடத்து சனிபகவானால் ஏற்படும் பாதிப்புகள் இதனால் குறையும். பொதுவாக அஸ்த நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுக்கு அதிகமாக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைபவர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களால் மற்றவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலை ஏற்படும். செலவுகளில் மட்டும் கட்டுப்பாடு தேவை. தினமும் விநாயகர் வழிபாடும் வாரம் ஒருமுறையேனும் விநாயகர் கோயிலுக்குச் சென்று பிரதட்சிணம் செய்து வழிபடுவதும் நல்லது. 10 முறை தோப்புக்கரணமும் 10 முறை பிரதட்சிணமும் செய்ய வேண்டும். விநாயகர் அகவல் பாடுவதும் கேட்பதும் நல்லது. ஒருமுறை, பூரண புஷ்கலை சமேதராக ஐயப்பன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

சித்திரை: சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் கன்னி ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் துலா ராசியிலும் வரும். எனவே சனிபகவான் முதல் இரண்டு பாதங்களுக்கு 5-ம் இடத்திலும் 3, 4 ஆகிய பாதங்களுக்கு நான்கிலும் அமர்ந்து பலன் தர இருக்கிறார். சித்திரை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களின் ராசிக்குக் கோசாரப்படி சனிபகவான் சாதகமாக இல்லை. என்றாலும் பெரிய பாதகங்களும் நேராது. குருபகவான் ராசியைப் பார்ப்பதால் தொல்லைகள் நீங்கும். புதிய முயற்சிகளில் கவனமாகச் செயல்பட்டால் நன்மைகள் நடைபெறும். இவர்கள் எப்போது சிவ நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டியது அவசியம். சிவஸ்துதி ஒன்றை சொல்லிக்கொண்டே பணியாற்றினால் வெற்றிகள் கிடைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு