Election bannerElection banner
Published:Updated:

கும்ப ராசிக்கு பிள்ளையார் வழிபாடு நற்பலன் அளிக்கும்!

பிள்ளையார்
பிள்ளையார்

சனிபெயர்ச்சி கும்ப ராசி பரிகாரம்

கும்பம்:

சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை, விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். அனுமன் வழிபாடும் விநாயகர் வழிபாடும் சிறந்த பலன்களைத் தரும். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள்; தடங்கல்கள் நீங்கும்; வீட்டில் மங்கலச் சூழல் நிறையும்.

கும்ப ராசியைச் சேர்ந்த அவிட்டத்தின் 3,4 பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏழரைச் சனி தற்போதுதான் ஆரம்பிக்கிறது. கும்பமும் சனிபகவானின் சொந்த வீடுதான் என்பதால் பெரும் கெடுதல்கள் ஏதும் ஏற்படாது. அதே வேளையில் ராசிக்கு 12 - ல் அமரும் சனி பகவான் செலவுகளை அதிகரிக்கச் செய்வார். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். இவர்கள் முருக வழிபாடு செய்வது நல்லது. முருகனுக்கு உகந்த விபூதி அபிஷேகம் செய்து அதைக் கண்ணாரக் கண்டு வழிபடுவது மிகச் சிறந்த பரிகாரமாகும். முருகனின் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தால் நற்பலன்கள் விளையும்.

சதயம்: சதய நட்சத்திரம் கும்ப ராசிக்கு ஏழரைச் சனி தொடங்க இருக்கிறது. சதய நட்சத்திரத்தின் அதிபதி தர்மதேவதை. எனவே எப்போதும் தர்ம வழியில் நடப்பதே இவர்களுக்கான பரிகாரமாகும். கும்ப ராசிக்கு 12-ம் இடத்தில் அமரும் சனிபகவான் தேவையற்ற குழப்பங்களை மனத்தில் உருவாக்குவார். ஆனால் கும்பமும் சனிபகவானின் சொந்த வீடு என்பதால் பிரச்னைகளைக் குறைவாகவே தருவார். ஏழரைச் சனியால் உண்டாகும் பிரச்னைகள் நீங்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு பால் மற்றும் இளநீர் அபிஷேகம் செய்து அதைக் கண்டு மகிழ வேண்டும். இதனால் மன அமைதியும் தெளிந்த சிந்தனையும் உண்டாகும். அந்தணர்கள், வேதம் படித்த பண்டிதர்களுக்கு உதவுவதன் மூலம் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

பூரட்டாதி: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமாக இந்தச் சனிப்பெயர்ச்சி அமைய இருக்கிறது. பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும் கடைசி பாதம் மீன ராசியிலும் அமைகின்றன. இதனால் முதல் மூன்று பாதங்களுக்கு ஏழரைச் சனி தொடக்கம்; நான்காம் பாதத்துக்கு 11-ம் இடத்தில் சனிபகவான் அமர்கிறார். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குபேரன். குபேரனின் ஆசியைப் பெற நாம் சிவ வழிபாடும் ஐயப்ப வழிபாடும் செய்ய வேண்டியது அவசியம். குலதெய்வ வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டியது அவசியம். உள்ளூரில் இருக்கும் சாஸ்தா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு