Published:Updated:

மிதுனராசியினருக்குக் குலதெய்வ வழிபாடு வரம் அருளும்

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு

சனிப்பெயர்ச்சி மிதுன ராசி பரிகாரம்

மிதுனம்

சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 8-ம் வீட்டில் அமர்கிறார். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. குலதெய்வ வழிபாடு நன்மைகளை அளிக்கும். சனைச்சர ஸ்தோத்திரங்களைப் படித்து அவரை வழிபடுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிட்டு வாருங்கள். உங்களின் பிரச்னைகள் நீங்கி, வாழ்வில் வெற்றி கிடைக்கும்.

மிருகசீரிடம் 3,4-ம் பாதம் மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். இதனால் உறவுகளுக்கிடையே சிக்கல், தேவையற்ற செலவுகள், ஆரோக்கியத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஆகியன ஏற்படக்கூடும். எனவே சொல்லிலும் செயலிலும் நிதானம் தேவை. ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை அலட்சியம் செய்வது கூடாது. இந்த பாதிப்புகளிலிருந்து விடுபட கிருஷ்ண வழிபாடே சிறந்த பரிகாரமாகும். கிருஷ்ண பகவானுக்குரிய ஏகாதசி திதிகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது மிகவும் விசேஷமாகும். முடிந்தால் ஒருமுறை குருவாயூர் சென்று தரிசனம் செய்வதும் நன்மை பயக்கும்.

திருவாதிரை: சிவபெருமானின் நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரக்காரர்கள், அனுதினமும் சிவ வழிபாடு செய்ய வேண்டியவர்கள். சிவ நாமத்தை எப்போதும் உச்சரித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்கள். அவ்வாறு ‘சிவ... சிவ’ என்று சொல்பவர்களுக்குக் கோள்கள் எல்லாம் ‘நல்ல நல்ல’ என்று சம்பந்தப் பெருமானே பாடியிருக்கிறார். எனவே அஷ்டமச் சனி வருகிறதே என்ன பாதிப்புகள் வருமோ என்று அச்சப்படாமல், சிவ நாம பாராயணம் செய்வதும் சிவபுராணம் படிப்பதும் திருவாதிரை நட்சத்திரக் காரர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும். ருத்ர ஜபம் செய்வதும் கேட்பதும் மிகவும் நல்லது. மேலும் ருத்ர ரூபனான அனுமனைச் சனிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் கூடுதல் பலத்தோடு செயல்படலாம். அதனால் சனிபகவானால் உண்டாகும் பிரச்னைகள் விலகி நன்மைகள் உண்டாகும்.

புனர்பூசம்: ராமபிரானின் நட்சத்திரமான புனர்பூச நட்சத்திரம் 1,2,3 ஆகிய பாதங்களைச் சேர்ந்த மிதுனராசிக்காரர்களுக்கு அஷ்டமச் சனி தொடங்குகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கக் கட்டாயம் அனுமனை வழிபட வேண்டும். அனுமன் சனிபகவானை வென்றவர் என்பதால் அவரை வழிபடுவதன் மூலம் சனியின் கெடு பார்வையிலிருந்து தப்பலாம். அனுமனைப் போன்ற நிதானமான பொறுமையும் பக்தியும் கொண்டு ராம வழிபாடும் அனுமன் வழிபாடும் செய்துவந்தால் இந்தக் காலகட்டத்தில் நன்மைகள் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஆஞ்சநேயரை வழிபடுவதோடு ராமநாம ஜபமும் செய்ய வேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு