Election bannerElection banner
Published:Updated:

சிம்மராசிக்கு சனி தரிசனம் சந்தோஷம் தரும்!

சனிபகவான்
சனிபகவான்

சனிப்பெயர்ச்சி சிம்ம ராசி பரிகாரம்

சிம்மம்:

சிம்ம ராசிக்கு 27.12.2020 முதல் 6-ம் இடத்தில் இருந்து அருள் தருகிறார் சனிபகவான். அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அவரின் அதிசாரம் மற்றும் நட்சத்திர சஞ்சாரநிலைகளின்படி, சிற்சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் உரிய வழிபாடுகளால் நன்மை அடைய முடியும். இந்த ராசியினருக்குச் சிவ தரிசனம் நன்மை சேர்க்கும். திருவாரூர் அருகில், காரையூரில் - சங்கரநாராயணர் கோயிலில் அருளும் சனி பகவானை தரிசித்து வாருங்கள்; சந்தோஷம் பெருகும்.

மகம்: மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் சிம்மராசியாகும். இந்த ராசிக்கு ஆறாம் இடத்தில் சனிபகவான் அமர்ந்து பலன் தரப்போவது மிகவும் சிறந்த அமைப்பாகும். அண்மையில் நடைபெற்ற குருப்பெயர்ச்சியும் இந்த நட்சத்திரக்காரர்களுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மகம் நட்சத்திரக் காரர்களுக்கு வெற்றிகள் குவியும் காலகட்டம். தொழிலில் நல்ல முன்னேற்றம், எதிர்பாராத பணவரவு ஆகியன உண்டாகும். மக நட்சத்திரக்காரர்கள் எப்போதும் தங்களின் பெற்றோரை வழிபட வேண்டும். தினமும் தந்தை, தாயின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறும் மகம் ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும். முறையாக பித்ருக்கள் வழிபாடு செய்துவருவது இவர்களைக் கிரக தோஷங்களிலிருந்து காக்கும். மக நட்சத்திரக்காரர்கள் சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலய தரிசனம் செய்வதும் நல்ல பரிகாரமாகும்.

பூரம்: பார்வதி தேவியை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரக்காரர்களான பூர நட்சத்திரக் காரர்களுக்குப் பல்வேறு சுப பலன்கள் நடைபெறும் கால கட்டம் இது. உங்கள் ராசிக்கு ஆறில் சனி அமர்ந்து நற்பலன்களை வழங்க இருக்கிறார். எனவே, பூர நட்சத்திரக் காரர்களுக்கு இதுவரை இருந்துவந்த எதிரிகளின் தொல்லைகள் மறையும். புகழ், பெருமை ஆகியன தேடிவரும். இவர்கள் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. சிவாலய தரிசனமும் சிவபுராண பாராயணமும் நற்பலன்களை அதிகரிக்கும். மேலும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவோ கேட்கவோ செய்தால் சகல நன்மைகளும் தேடிவரும்.

உத்திரம்: உத்திர நட்சத்திரத்தின் அதிதேவதை சூரிய பகவான். இந்த நட்சத்திரத் தில்தான் ஐயப்ப சுவாமி அவதரித்தார் என்பது கூடுதல் சிறப்பு. உத்திர நட்சத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியிலும் பிற பாதங்கள் கன்னி ராசியிலும் வரும். அதனால் உத்திர நட்சத்திரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு 6-ம் இடத்திலும் கன்னி ராசிக் காரர்களுக்கு 5-ம் இடத்திலும் அமர்ந்து சனிபகவான் பலன்கள் தர இருக்கிறார். உத்திரம் 1-ம் பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு நற்பலன்கள் மிகுதியாக நடைபெறும் பெயர்ச்சியாக இது அமையும். இவர்கள் ஐயப்ப வழிபாடும் சூரிய வழிபாடும் செய்வதன் மூலம் மேலும் நற்பலன்களை அதிகரிக்கலாம். அதேபோன்று தானம் செய்வதன் மூலம் தனலாபங்களை அடையமுடியும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு