Election bannerElection banner
Published:Updated:

துலாம் ராசிக்கு அனுமன் வழிபாடு நன்மைகள் அளிக்கும்

அனுமன்
அனுமன்

சனிப்பெயர்ச்சி துலாம் ராசி பரிகாரம்

துலாம்:

துலாம் ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சியில், சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை, சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் அலைச்சல் இருக்கும். வீடு வாங்குவதில் தடைகளும், நிலப் பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு. சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும். ஏழைப் பெண்களின் திருமணத்துக்குப் பொரு ளாதார உதவி செய்யுங்கள்; மகிழ்ச்சி பெருகும்.

சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதத்தில் பிறந்தவர்களின் ராசிக்கு 4-ம் இடத்தில் சனி பகவான் அமர இருக்கிறார். இது அர்த்திராஷ்டம சனியாகும். இதனால் சின்னச் சின்னத் தடைகள் செயல்களில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும் என்றாலும் பாதிப்புகள் அதிகம் இருக்காது. எனவே இந்த பாதங்களைச் சேர்ந்தவர்கள் சுப்ரமண்ய வழிபாடு செய்வதன் மூலம் பாதிப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு நன்மையடையலாம். வாய்ப்புள்ளவர்கள் ஒருமுறை திருச்செந்தூர் சென்று வழிபடுவது நன்மை தரும்.

சுவாதி: வாயு பகவானின் நட்சத்திரமான சுவாதி நட்சத்திரம் துலாராசியைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு 4 - ல் அமர்ந்து பலன் தருவதால் கண்டகச் சனி அல்லது அர்த்திராஷ்டம சனியாவார். ஆனாலும் துலா ராசியைப் பொறுத்தவரை அது சனியின் உச்சவீடு. சனிபகவான் ஆட்சி பலம் பெற்று அமர்வதாலும் நீசமான குருவோடு சேர்ந்து பலன்கொடுப்பதாலும் துலாராசிக்கு நற்பலன்களே விளையும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்து கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய காலகட்டம் இது. மனக்குழப்பங்கள் ஏற்படும். இதனால் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள்.

எனவே முறையான இறைவழிபாடு செய்ய வேண்டியது அவசியம். வாயுபகவான் அதிதேவதை என்பதால் வாயுபுத்திரனான அனுமனை வழிபடுவது மிகவும் நற்பலன்களைத் தரும். சனிக்கிழமைகளில் சுந்தரகாண்ட பாராயணமும் ஆலயம் சென்று அனுமன் தரிசனமும் செய்வது நல்லது. மேலும் சுவாதி நட்சத்திரம் நரசிம்ம சுவாமிக்கு உரியது. பிரதோஷ தினத்தன்று மாலை நரசிம்ம சுவாமிக்குப் பானக நிவேதனம் செய்து வழிபடுவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் தீரும்.

விசாக நட்சத்திரம் முதல் மூன்று பாதங்கள் துலா ராசியிலும் நான்காம் பாதாம் விருச்சிக ராசியிலும் அமைகின்றன. எனவே முதல் மூன்று பாதங்களைச் சேர்ந்தவர்கள் அர்த்திராஷ்டமம் நடைபெறுவதால் முருக வழிபாட்டையும் விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். வேலை அல்லது கல்வி நிமித்தமாகக் குடும்பத்தை பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆனால் அதிகமாக பயப்படும்படி எதுவும் நடந்துவிடாது. முடிந்தவரை சரவண பவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். குருவாயூருக்குச் சென்று கிருஷ்ண வழிபாடு செய்வதும் இவர்களுக்கு மிகவும் உகந்த வழிபாடாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு