Published:Updated:

மீன ராசிக்கு மகான்களின் திருவருள் நற்பலன் அளிக்கும்!

காஞ்சி மகாபெரியவர்
காஞ்சி மகாபெரியவர்

சனிப்பெயர்ச்சி மீன ராசி பரிகாரங்கள்

மீனம்:

மீன ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சியின் விளைவால், பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்க புது வழி பிறக்கும். சகோதரிக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனி பகவான் அதிசாரத்தில் 12-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்து செல்லலாம்.

மகான்களின் அதிஷ்டானங்களை தரிசித்து வாருங்கள். உழவாரப் பணிகளில் பங்களிப்பு செய்யுங்கள்; சங்கடங்கள் அனைத்தும் நீங்கும்; சந்தோஷம் உண்டாகும்.

மீன ராசியில் அமையும் பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாகத்துக்காரர்கள், இந்தச் சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஏற்கெனவே உங்களுக்கு குரு, ராகு - கேது ஆகிய கிரகங்கள் நற்பலன்களைத் தந்துகொண்டிருக்கிறார்கள். அதோடு சனிபகவானும் இணைந்து நற்பலன்களை வழங்க இருக்கிறார். ஏற்றமான ஒரு காலம் அமைய இருக்கிறது. இந்த நற்பலன்கள் அதிகரிக்க, `ஓம் நமோ நாராயணா’ என்னும் எட்டெழுத்து மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் புருஷ சூக்தம் பாராயணம் செய்வதும் செவிமடுப்பதும் குபேர சம்பத்துக்களைப் பெற்றுத் தரும். மஞ்சள் பட்டு வஸ்திரத்தை பெருமாளுக்குச் சமர்ப்பித்து வணங்குவது, இவர்களுக்கான சிறந்த பரிகாரமாகும்.

உத்திரட்டாதி: மீன ராசிக்காரர்களான உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இந்தக் காலகட்டம் மிகவும் அதிர்ஷடமான காலமாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். இதுவரை நிலுவையில் இருந்த வழக்கும் எல்லாம் சாதகமாகும். நீதியின் வழியில் நடக்கும் இந்த நட்சத்திரக்காரர்கள் சிவ சகஸ்ரநாம பாராயணம் செய்வது சிறந்த பரிகாரமாகும். தானம் அளிப்பதும் கோயில்களைப் புனரமைக்க உதவுவதும் மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

ரேவதி: மிகவும் அற்புதமான காலகட்டத்தில் ரேவதி நட்சத்திரக்காரர்கள் அடியெடுத்துவைக்கிறார்கள். இதுவரை 10-ம் இடத்தில் கண்டகச் சனியாக இருந்த சனி பகவான் தற்போது அவரது சொந்தவீடான மகரத்தில் பிரவேசித்து மீன ராசிக்கு 11 - ம் இடத்தில் அமர இருக்கிறார். இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து மிகவும் சாதகமான பலன்களைத் தரப்போகும் காலகட்டமாக இது அமையும்.

மேலும் ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான். அவர் ஆட்சி பலம் பெற்று அமர்வது மிகவும் சிறப்பானதாகும். இதுவரை தடைப்பட்ட செல்வச் செழிப்புகளையெல்லாம் அள்ளி வழங்கப்போகிறார் சனிபகவான். இந்த நட்சத்திரக்காரர்கள் மேலும் நற்பலன்களைப் பெற கிருஷ்ண பகவானை வணங்குவது நல்லது. ஆலயங்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் வைத்து நிவேதனம் செய்வதற்குரிய பொருள்களைத் தானம் அளிப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். சர்க்கரைப் பொங்கலைப் போல வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

அடுத்த கட்டுரைக்கு