Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசிக்கு ஏற்பப் பலன்கள் வழங்குவதுபோல் அவர் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் பலன்கள் அருள்வார். அந்த அடிப்படையில் இந்தப் பெயர்ச்சியில் சனிபகவான் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களின் அடிப்படையிலான பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் இக்கால கட்டத்தில் பிரபலங்கள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, வீண்பகை, அரசு விஷயங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்கள் ராசிநாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, அரசு மரியாதை, வீடு, மனை வாங்குதல் போன்றவை தேடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றங்கள், இழப்புகள், மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் சுபகாரியம், பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவியுயர்வு ஆகியன உண்டாகும்.

சனி பகவான்
சனி பகவான்

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாள்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு