Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... ரிஷப ராசிப்பெண்களுக்கான சிறப்பு பலன்கள்!

ரிஷப ராசி
ரிஷப ராசி

தகுதியிருந்தும் தள்ளி வைக்கப்பட்டார்கள். இனி உங்களின் திறமையை உலகறியும். உயரதிகாரிகள் தேடி வந்து ஆலோசனை கேட்பார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு என வாரி வழங்குவார்.

இதுவரை உங்களின் அஷ்டமஸ்தானத்திலிருந்து உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துவந்த சனிபகவான் தற்போது 9 ம் இடம் சென்று அமர்கிறார். இதுவரை தலைமுடி கொட்டி, கவலை தோய்ந்த முகத்துடன் கைகால் சோர்ந்து காணப்பட்டீர்கள். 'என்ன பிரச்சனை, ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்' என துக்கம் விசாரிக்கும் அளவிற்கு உடைந்து போனீர்கள். அந்த நிலைமை தற்போது மாறுகிறது. அஷ்டமத்துச் சனி விலகுவதால் மனக்கவலைகள் நீங்கும். இனி சிரிக்கத் தொடங்குவீர்கள். அன்றாட வாழ்க்கை ஆடம்பரமாகும். இதுவரை கணவர் வார்த்தையாலே வாட்டியெடுத்தார் அல்லவா, இனி உங்களைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.. நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

அலுவலகம் செல்லும் பெண்கள், தகுதியிருந்தும் தள்ளி வைக்கப்பட்டார்கள். இனி உங்ககளின் திறமையை உலகறியும். உயரதிகாரிகள் தேடி வந்து ஆலோசனை கேட்பார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு என வாரி வழங்குவார். வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிப்பீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்ன நோயென்று தெரிந்து கொள்ளவே ஏகப்பட்ட ரூபாயைச் செலவழித்தவர்கள், சாதாரண மருந்து மூலம் நிவாரணம் பெறுவார்கள். நோய் குணமாகும். தெய்வ நம்பிக்கையே குறைந்து போனவர்களுக்கு இனி ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

இனி நீங்கள் மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வருமானம் உயரும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நின்று போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வெகுநாள்களாக வீடு, மனை வாங்கவேண்டுமென கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது அந்தக் கனவு நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரம் செய்யும் ரிஷபராசிப் பெண்களுக்கு இதுவரை இழப்புகளையே சந்தித்துவந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், எதுவும் லாபம் தங்கவில்லையே என்று வருந்தினீர்கள். இனி தொழிலில் கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் தொலைநோக்குச் சிந்தனையால் ஆதாயம் கூடும். உணவு, அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.

சனி பகவான்
சனி பகவான்

வேலைக்குச் செல்லும் பெண்கள் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்கள். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் அவமானப் படுத்தினார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவியுயர்வை வேறொருவர் தட்டிச் சென்றார். இனி அந்த அவலநிலையெல்லாம் மாறும். உங்கள் கை மேலோங்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்து சேரும். கலைத்துறைப் பெண்கள் கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்களிலிருந்து மீள்வார்கள். உங்களை அலைக்கழித்த நிறுவனம், இனி வாய்ப்பு தருவதற்காக உங்களை நாடி வரும். பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி வறுமை, வருத்தங்களிலிருந்து விடுபட வைப்பதுடன் நிம்மதியையும், செல்வ வளத்தையும் தருவதாக அமையும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு