Published:Updated:

சனிப்பெயர்ச்சி... துலாம் ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு துலாம் ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மருத்துவச் செலவுகள், கருத்துமோதல்கள் வரும். பாகப் பிரிவினையால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் நிதானம் தேவை. சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை பிறக்கும்.

துலாம்
துலாம்

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அலுவலகத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள், வீண்பழி வரக்கூடும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் தன - சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் மனைவி வழியில் ஆதாயம் உண்டு. சொத்துச் சேர்க்கையுண்டு. கருத்து வேறுபாடுடன் இருந்த சகோதரர் இனி வலிய வந்து பேசுவார்.

சனி  பகவான்
சனி பகவான்

இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியில் சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரத்தின் பெரும்பான்மை உங்களுக்கு நல்ல பலன்களையே தருவனவாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு