சனிப்பெயர்ச்சி... தனுசு ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், தனுசு ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...
சனிபகவான் 2 ம் வீட்டில் அமர்ந்து, 4,8,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். சனிபகவான் உங்களின் 4 ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களின் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள்.

சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரங்கள் நினைப்பார்கள் என்பதால் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டம்.