Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள் - ரிஷபம்

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் இருக்கும் இடத்தைப் போலவே அவர் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் பலன்கள் சொல்வதுண்டு. அந்த அடிப்படையில் ரிஷப ராசிக்கான பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை

சனிபகவான் இருக்கும் இடத்தைப் போலவே அவர் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் பலன்கள் சொல்வதுண்டு. அந்த அடிப்படையில்

ரிஷப ராசி அன்பர்களே உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் சனிபகவான் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சஞ்சாரம் செய்வதால் இக்கால கட்டத்தில் அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகள் முழுமையடையும். பழைய கடன் தீரும்.

இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். இரவு நேர பயணங்களை தவிர்த்துவிடுங்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

சனி பகவான்
சனி பகவான்

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் தைரியஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் சப்தம மற்றும் விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு