Election bannerElection banner
Published:Updated:

கும்ப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

கும்ப ராசி
கும்ப ராசி

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தார். நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்கள்.

இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொண்டு மாற்றம் இல்லாமல் எப்போதும் ஒன்றுபோல் நடந்துகொள்ளும் கும்ப ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் விரைய சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இதுவரை லாப வீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. ஆனால் இப்போது உங்கள் ராசிநாதன் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்வதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே... என்று பதற வேண்டாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தார். நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்தது. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளா சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட குலதெய்வ பிராத்தனையைத் தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களைச் சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருள்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதி மன்றம் செல்லாமல் முடிந்த வரை பிரச்னைகளைப் பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

கும்பம்
கும்பம்

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஜன்மச் சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். வறட்டு கௌரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு