Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கும்ப ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், கும்ப ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...

நவகிரகங்களில் சனிபகவானுக்கும் குருபகவானுக்குமே சிறப்பு பார்வைப் பலன்கள் உண்டு. சனிபகவான் தான் இருக்கும் ராசியிலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியினால் கும்பராசிக்கு 2,6,9 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்க இருக்கிறார்.

சனிபகவான் உங்களின் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். கொடுத்த வாக்கைக் காப்பற்றப் போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் உங்களின் 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும்.

சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம் என்பதால் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு