Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கும்பராசிக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள்!

கும்பம்
கும்பம்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு கும்ப ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாமியார், நாத்தனாரின் ஆதரவு பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவர்வழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் தந்தையாருடன் கருத்துமோதல்கள் வரும். அவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் அடிவயிற்றில்வலி, அலர்ஜி, சளித் தொந்தரவு மற்றும் கடன் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை வக்ரத்தில் செல்வதால் பூர்விகச் சொத்து சம்பந்தபட்ட வழக்கில் வெற்றி, திடீர் பணவரவு உண்டு.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் திருதிய - ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்டநாள் பிராத்தனைகளையெல்லாம் செய்து முடிப்பீர்கள். கணவரின் சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் அலைச்சல் அதிகரிக்கும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவு பெருகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு