Published:Updated:

கும்பராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனி மாற்றம் உங்களுக்குப் பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

வியாபாரிகளுக்கு...

இதுவரை உங்களின் லாபஸ்தனத்திலிருந்த சனிபகவான் இப்போது விரைய ஸ்தானத்துக்கு ஏழரைச் சனியாக வருகிறார். அதனால் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாள்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாள்களையும் பணியில் அமர்த்துவீர்கள். மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

கும்பம்
கும்பம்

உத்தியோகஸ்தர்களுக்கு...

அலுவலகச் சூழலில் இருந்த சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைசுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. கணினித் துறையினருக்குப் பதவியுயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.

இந்த சனி மாற்றம் உங்களுக்குப் பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு