
சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து 3,7,10 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். சனிபகவான் உங்களின் 3 -ம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி தேடி வரும்.
சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து 3,7,10 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். சனிபகவான் உங்களின் 3 -ம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி தேடி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான்
உங்களின் 7 - ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்குக் கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தைக் குறையுங்கள்.

சனிபகவான் உங்களின் 10 -ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.
ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசியில் அமர்ந்திருக்கும் சனிபகவான் தன் பார்வையாலும் மிகுதியான நற்பலன்களையே வழங்க இருக்கிறார்.