Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மகர ராசிக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

மகரம்
மகரம்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு மகர ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் தேடி வரும். முடங்கிக் கிடந்த சில பணிகள் இனி முழுமையடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். வேற்றுமதத்தினர், வேற்றுநாட்டினர் உதவுவார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சின்னச் சின்ன விபத்துகள், மனஉளைச்சல்கள், வீண்பழி வந்து நீங்கும்.

சனி  பகவான்
சனி பகவான்

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வீடு, மனை வாங்குவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வாழ்க்கைத்துணை வழியில் வீண் அலைச்சல், செலவினங்களும், உடல் நலக் குறைகளும் வந்து போகும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் சுக - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள்.

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு