Published:Updated:

மகரராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை ராசிக்கு 12 ல் இருந்து செயல்களை எல்லாம் தடை செய்துகொண்டிருந்த சனிபகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். இதனால் வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள்.

இதுவரை ராசிக்கு 12 ல் இருந்து செயல்களை எல்லாம் தடை செய்துகொண்டிருந்த சனிபகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். இதனால் வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக்கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இனி கணிசமாக லாபம் உயரும். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

மகரம்
மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பாரபட்சமாக நடந்துகொண்ட பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டுப் புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனித் தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கணினி துறையினர் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளையும் தரும்.

அடுத்த கட்டுரைக்கு