Published:Updated:

தனுசு ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

தனுசு
தனுசு

2 ம் இடத்தில் அமரும் சனிபகவானால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்கமாட்டார்கள்.

ஜன்ம சனியாக உங்கள் ராசியில் அமர்ந்த சனிபகவானால் தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

2 ம் இடத்தில் அமரும் சனிபகவானால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்கமாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியால் உங்கள் தொழிலில் புதிய மாற்றங்களும் நல்ல முன்னேற்றங்களும் உருவாகும் என்பது உறுதி.

ஜன்ம சனியால் வேலைபார்க்கும் இடத்தில் படாத பாடு பட்ட தனுசு ராசி அன்பர்களே... இனி அந்த சூழல் மாறும். இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களைக் கடுமையாக வேலைவாங்கிய மேலதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதி மன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். என்றாலும் சனிபகவான் உங்களின் வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் அலுவலகத்தில் வீண் பேச்சை குறையுங்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனியின் பார்வையால் இனி இழந்த சலுகைகள், பதவிகளை தேடி வரும். கணினிதுறையினர்களுக்கு, வெளிமாநிலம் - வெளிநாட்டிகளில் கான்ட்ராக்ட் முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும். இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.

அடுத்த கட்டுரைக்கு