Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மிதுனராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

7 ம் இடத்தில் இருந்த சனிபகவானால் தாராளமாக முதலீடு செய்து, விசாலமாகக் கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். இப்போது 8 ல் குடிவருகிறார்.

மிதுன ராசி வியாபாரிகளே... 7 ம் இடத்தில் இருந்த சனிபகவானால் தாராளமாக முதலீடு செய்து, விசாலமாகக் கடையை விரிவுபடுத்தி நட்டப்பட்டது தான் மிச்சம். இப்போது 8 ல் குடிவருகிறார். இனியாவது ஆழம் தெரிந்து கால் வையுங்கள். வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். வேலையாள்களால் ரகசியங்கள் கசியக் கூடும். அரசு விஷயங்களில் அலட்சியம் காட்டாதீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்னைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். என்றாலும் பொறுமையும் திட்டமிடலும் உங்களுக்கு இந்தக் காலகட்டத்தில் வெற்றியைத் தேடித்தரும்.

சனி பகவான்
சனி பகவான்

உத்தியோகஸ்தர்களே, நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். உங்களுக்காகப் பரிந்து பேசிய உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனினும் சம்பளம் உயரும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். புது வாய்ப்புகளும், பொறுப்புகளும் சற்று தாமதமாகி கிடைக்கும்.

இந்த சனி மாற்றம் செலவுகளிலும், பிரச்சனைகளிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு