Published:Updated:

துலாம்ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி... துலாம்
சனிப்பெயர்ச்சி... துலாம்

போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

இதுவரை துலாம் ராசிக்கு மூன்றில் இருந்து நல்ல பலன்களை வழங்கிவந்த சனிபகவான் தற்போது 4 ல் சென்று அர்த்திராஷ்டம சனியாக அமர்கிறார். ஆனால் பயப்படும்படியான எந்த வீழ்ச்சியும் நடக்காது. கொஞ்சம் கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு வாயில தோசை என்று சொல்லிவிடுங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும், கருத்து மோதல்களும் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாள்களை முழுமையாக நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் பேராசையில்லாமல் எச்சரிக்கையோடு உழைத்தால் சனிபகவானின் அருளோடு தொழிலை நல்ல முறையில் நடத்தி லாபம் ஈட்டலாம்.

சனிபகவான் உச்சமடையும் வீடு துலாம். எனவே ஒருபோது சனிபகவான் உங்களுக்குப் பெரும் தீமைகள் செய்ய மாட்டார். என்றாலும் இந்த முறை சனியின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுகிறது. அதனால் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களைக் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுவது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அலுவல ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள்.

பணம்
பணம்

ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினர் கண்பார்வையைக் கோளாறு,தசை பிடிப்பு ஆகியன நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக்கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும் காலமாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு