Published:Updated:

சிம்ம ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசி
சனிப்பெயர்ச்சி... சிம்ம ராசி

தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

சிம்மராசிக்கு 5 ம் வீட்டிலிருந்த சனிபகவான் தற்போது 6 ம் வீட்டில் சென்று அமர்கிறார். அதனால் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அதிரடி லாபம் கிடைக்கும். பல முறை கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்ட காலம் முடிந்து, இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள்.

தொழில்
தொழில்

தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாள்கள் ஆதரவாக இருப்பார்கள். மொத்தத்தில் எதிர்பாராத லாபம் தரக்கூடிய காலமாக இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம் அமையும்.

இதுவரை 5 ம் இடத்தில் இருந்த சனிபகவான் உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்துவந்தார்.

வேலைபார்க்கும் இடங்களில் நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டீர்கள். இந்த நிலை இப்போது முற்றிலும் மாறும். இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எந்த வேலையிலும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் கிடைக்கும்.

சனிபகவான்
சனிபகவான்

வெகுநாள்களாகப் போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினித்துறையிலிருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பத்துடன் வாய்ப்பு கிடைக்கும். இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர்யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு