Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கடக ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

கடகம்
கடகம்

சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 1,4,9 ஆகிய வீடுகளுக்குக் கிடைக்கிறது.

சனிபகவான் 7 ல் அமர்ந்து பலன் தருவதைப் போலவே தன் பார்வையாலும் பலன்கள் தருவார். இந்தப் பெயர்ச்சியில் சனிபகவானின் பார்வை, ராசி, நான்கு மற்றும் ஒன்பது ஆகிய வீடுகளுக்குக் கிடைக்கிறது. உங்கள் ராசியையே சனிபகவான் பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்குவீர்கள். புது நிறுவங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது.

சனி பகவான்
சனி பகவான்

எப்போதும் போல இனிமேல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.

சனிபகவான் 4 - ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் வந்துபோகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும்.

சனிப்பெயர்ச்சி...
சனிப்பெயர்ச்சி...

சனிபகவான் உங்களின் 9 ம் வீட்டைப் பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும். என்றாலும் குருபகவானின் பார்வை அடுத்த 11 மாதங்களுக்கு இருப்பதால் உங்கள் கஷ்டங்களைக் கடந்து வெற்றிபெறுவீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு