Election bannerElection banner
Published:Updated:

கடக ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை கடகராசிக்கு 6 ம் வீட்டில் அமர்ந்து லாபங்களை வழங்கிவந்த சனிபகவான் தற்போது 7 ம் வீட்டுக்குப் பெயர்கிறார். இதனால் வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டாகும் பலன்கள், இதோ உங்களுக்காக...

கடகராசி வியாபாரிகளுக்கு...

உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். இது மிகவும் உத்தமமான அமைப்பு என்று சொல்ல முடியாது. அதனால் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். கூட்டுத் தொழில் வேண்டாமே. வேலையாள்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்தவரை கடன் தருவதைத் தவிர்க்கப்பாருங்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்குப் பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாள்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள். உண்மையோடும் விழிப்புணர்வோடும் கடுமையாக உழைத்தால் உங்களே வெற்றிகிடைக்கும் என்பதால் கவலைப்பட வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

இதுவரை உங்கள் ராசிக்கு சாதகமாக ஆறாம் வீட்டில் இருந்த சனிபகவான் தற்போது ஏழாம் வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆட்சிபலமும் பெறுகிறார். இது மிகவும் சாதகமான அமைப்பு என்று சொல்ல முடியாது. எனவே முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள்.

கிரகம்
கிரகம்

வெகு நாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு திடிரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். தேவையில்லாமல் கோபப்பட்டுப் பேச வேண்டாம். இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சனைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு