Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மிதுன ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள்
மிதுனம் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிபகவான் இருக்கும் இடத்தைப்போலவே அவரின் பார்வை படும் வீடுகளுக்கும் பலன்கள் உண்டு. அவ்வாறு உங்களின் 2,5,10 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்கிறார். சனிபகவான் அஷ்டமத்தில் அமர்ந்தாலும் அவரின் பார்வையால் நன்மைகள் நடைபெறும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

சனிபகவான் இருக்கும் இடத்தைப்போலவே அவரின் பார்வை படும் வீடுகளுக்கும் பலன்கள் உண்டு. அவ்வாறு உங்களின் 2,5,10 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்கிறார். சனிபகவான் அஷ்டமத்தில் அமர்ந்தாலும் அவரின் பார்வையால் நன்மைகள் நடைபெறும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த அடிப்படையில்,

உங்கள் ராசிக்கு 2 - ம் வீடான வாக்குஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

சனி பகவான்
சனி பகவான்

சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விகச் சொத்தில் பிரச்னைகள் வந்து சரியாகும்.

சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு