Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மிதுன ராசிக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிபகவான் சஞ்சாரம் செய்யும் நட்சத்திரங்களின் அடிப்படையிலும் பலன்கள் தருவார். இந்தப் பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கான சஞ்சார பலன்கள் இதோ...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

11.05.2021 முதல் 26.09.2021 வரை

இந்தக் காலகட்டத்தில் சனிபகவான் உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலகட்டத்தில் இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் மற்றும் வீண் செலவுகள் வந்து நீங்கும்.

மங்கல சனி பகவான்
மங்கல சனி பகவான்

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் தனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். உங்களிடம் பணம் பெற்று ஏமாற்றியவர்கள், இப்போது திருப்பித் தருவார்கள். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. நிதானமாகப் பேசுங்கள்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் ரோக - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நிலம் வாங்கும் யோகம் உண்டு. என்றாலும் ரத்த சோகை, ரத்த அழுத்தம் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. மூத்த சகோதரருடன் மோத வேண்டாம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாள்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு