Election bannerElection banner
Published:Updated:

லாபத்தில் சனி... யோகத்தில் மீனம்... மீனராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

சனிப்பெயர்ச்சி...
சனிப்பெயர்ச்சி...

பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியது. இனி இவையெல்லாம் மாறும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

எதையிழந்தாலும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்காது உழைக்கும் மீனராசிக்காரர்களே... ஆன்மிக ஈடுபாடும் இறைவழிபாடும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து எப்போதும் காக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டையையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டத்தில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்கமுடியாத நிலை இருந்ததே... உழைப்பு உங்களுடையது. பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்தது. வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கெட்ட பெயர் எடுத்தீர்கள். நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்கள். அடுத்தடுத்து வருத்தம் தரும் செய்திகள் வந்து கொண்டு இருந்தது.

சனி பகவான்
சனி பகவான்

பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியது. இனி இவையெல்லாம் மாறும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி குடும்பச் செலவுகளைக் குறைக்க முடிவுகளெடுப்பார்கள். பூர்விகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்பப் புது வீடு வாங்குவீர்கள்.

மருந்து மாத்திரை என்று சதா சாப்பிட்டும் பிரயோஜனமில்லாமல் போன தம்பதியருக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படித் திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இதுவரை கண்டும் காணாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசுவார்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 12ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு