Published:Updated:

சனிப்பெயர்ச்சி... சனிபகவானின் பார்வைப் பலன்கள் - மீனம்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், மீன ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...

லாப வீட்டில் அமர்ந்தாலும் சனிபகவானின் 3 ம் பார்வை உங்கள் ராசிக்கு அமைகிறது. இதனால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும்.

சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சில நாள்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்விகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சனி பகவான்
சனி பகவான்

சனிபகவான் உங்களின் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை.

அடுத்த கட்டுரைக்கு