Election bannerElection banner
Published:Updated:

சனிப்பெயர்ச்சி... மீனராசிக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு மீன ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் சின்னச் சின்னத் தடைகள், வீண் பகை, அலைச்சல் ஆகியன ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

சனி பகவான்
சனி பகவான்

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் பூர்வபுண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடம், சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் தன - பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு