Published:Updated:

விலகும் அஷ்டம சனி... விலகுமா தொல்லைகள்? ரிஷப ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை எதை பேசினாலும் தப்பாய் முடிந்தது. தன் மானம் உங்களுக்கு மிக முக்கியம். ஆனால் அதையும் சில இடங்களில் இழக்க நேர்ந்தது. பெரிய தொகையை, சொத்துக்களையெல்லாம் சில வஞ்சகர்களை நம்பி இழந்தீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மற்றவர்களின் குறைகளை நீக்கிவிட்டு, நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு எப்போதும் பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளும் ரிஷப ராசிக்காரர்களே, இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களைப் படாதபாடு படுத்திய சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை 9 வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்யப் போகிறார்.

இதுவரை தண்ணீருக்குள் அழுகின்ற மீனின் கண்ணீர் தரையிலிருப்பவர்களுக்குத் தெரியாததைப்போல உள்ளுக்குள் புழுங்கித் தவித்த உங்களைப் பலரும் பலவகையில் நோகடித்தார்கள். எதை பேசினாலும் தப்பாய் முடிந்தது. தன் மானம் உங்களுக்கு மிக முக்கியம். ஆனால் அதையும் சில இடங்களில் இழக்க நேர்ந்தது. பெரிய தொகையை, சொத்துக்களையெல்லாம் சில வஞ்சகர்களை நம்பி இழந்தீர்கள். உடன்பிறந்தவர்கள்கூட உங்களை அசிங்கப்படுத்தினார்கள்.

சனி பகவான்
சனி பகவான்

இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும். கணவன் - மனைவி என்று வெளியில் இருப்பவர்கள்தான் உங்களை நினைத்துக் கொண்டாலும், வீட்டில் எலியும், பூனையுமாகத் தானே இருந்தீர்கள். நிழலாகக் குடும்பம் நடத்திய நீங்கள், இனிதான் நிஜமாக வாழப்போகிறீர்கள். கண்வன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். இனி விட்டுக் கொடுத்து மற்றவர்களுக்கு உதாரணமாக வாழத் தொடங்குவீர்கள்.

இனி பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நிரந்தமான வேலை கிடைக்கும். தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். மகளை அயல்நாடு அனுப்பி படிக்க வைப்பீர்கள். வெகுநாள்களாகச் சொந்த வீடு கட்டிக் குடி போக வேண்டுமென்று கனவு கண்டுக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது அதற்கான அச்சாரமிடுவீர்கள்.

வெளிவட்டாரத்தில் உங்களைப் பார்த்தாலே படு பவ்யமாக எழுந்து நின்று கை கட்டி மரியாதை செய்தவர்களெல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனது. இனி அவர்களின் ஆட்டம் அடங்கும். இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள். வீண் அலைச்சலும், திடீர்ப் பயணங்களும் உங்களை பலவீனமாக்கியது. இனித் திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். என்றாலும் கொஞ்சம் அநாவசியச் செலவுகள் வந்து நீங்கும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, ஏமாற்றம் வந்துபோகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு