Published:Updated:

சனிப்பெயர்ச்சி... தனுசுராசிக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு தனுசு ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை கிட்டும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பழைய வழக்குகளில் கவனம் தேவை. கைப்பொருள்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

தனுசு
தனுசு

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் பணத்தட்டுபாடு, காரியத்தடை, திடீர் பயணங்கள் என வந்து நீங்கும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் யோகம், எதிர்பாராத உதவி, பண வரவு எல்லாம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் கிட்டும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய சொத்துச் சேர்க்கையுண்டு.

மங்கள சனி பகவான்
மங்கள சனி பகவான்

இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும், டென்ஷனும் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

அடுத்த கட்டுரைக்கு