Published:Updated:

சனிப்பெயர்ச்சி...விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3 ம் இடத்தில் அமர்ந்து, 5, 9,12 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். சனிபகவானின் பார்வைக்கேற்ப பலன்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காகச் செலவு செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் 12 - ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு