Published:Updated:

சனிப்பெயர்ச்சி... விருச்சிக ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு விருச்சிக ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

விருச்சிக ராசிக்கு தசமஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றியுண்டு. சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நல்ல தீர்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி வரும். டென்ஷன், மன உளைச்சல், மறைமுக பகைகள் அதிகரிக்கும்.

சனி பகவான்
சனி பகவான்

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டு. பொன் பொருள் சேரும். பிதுர் வழி சொத்துகள் வந்து சேரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வீண்செலவுகள், காரியத்தடைகள் வந்து நீங்கும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்கள் ராசிநாதான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் அழகு அறிவு கூடும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிகம்

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்துச் செல்லும். சகோதரகளுடன் மனத்தாங்கல் வரும்.

அடுத்த கட்டுரைக்கு