Published:Updated:

விருச்சிக ராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

விருச்சிகம்
விருச்சிகம்

பாத சனியாக அமர்ந்து வேலைபார்க்கும் இடத்தில் அமைதி இன்மையையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வந்த சனிபகவான் தற்போது 3 - ம் இடத்தில் அமர்கிறார். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் தீரும்.

இதுவரை 2 ம் இடத்தில் அமர்ந்து உங்களின் தொழிலில் முட்டுக்கட்டை போட்டுவந்த சனிபகவான் இப்போது மூன்றாம் இடம் சென்று அமர்கிறார். இதுவரை, நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு எதிர்கடையில் உள்ளவர்கள் ஏகப்பட்ட லாபம் பார்த்துவிட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தைப் பார்க்க முடியவில்லையே... என்று புலம்பித் தவிர்த்தீர்கள். அந்த நிலை மாறப்போகிறது.

சனி  பகவான்
சனி பகவான்

இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். அனுபமிகுந்த புது வேலையாள்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளைச் சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். ஏற்றமும் மாற்றமும் நிறைந்த காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமையும்.

பாத சனியாக அமர்ந்து வேலைபார்க்கும் இடத்தில் அமைதி இன்மையையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வந்த சனிபகவான் தற்போது 3 - ம் இடத்தில் அமர்கிறார். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் தீரும். பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு. இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துகொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்று வாழ வைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு