Published:Updated:

ஆறில் ஆட்சிபலம் பெறும் சனி... சிம்ம ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பலவேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 6 ம் வீட்டுக்கு இடம்பெயர்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொண்டு மற்றவர்களை நேர்மறை எண்ணங்களுடன் பார்க்க கூடிய சிம்மராசிக்காரர்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பலவேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 6 ம் வீட்டுக்கு இடம்பெயர்கிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள்கூடப் போராடி முடிக்கவேண்டியதாக இருந்த சூழ்நிலை மாறும். கடன் பிரச்னையால் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 6 ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார்.

சனி பகவான்
சனி பகவான்

எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டவர்கள், இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவார்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்த நிலை மாறும். இனி உங்களின் வாழ்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். இனி பக்குவமாகப் பேசிப் பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல் உள்ள உங்கள் முகம் இனி தெளிவடையும். இனி முழுத்தூக்கம் வரும். குழந்தைபாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதிக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நெடுநாள்களாகத் தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களால், கெட்ட நண்பர்களால் பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள், நண்பர்கள் இனித் தேடி வந்து உறவாடுவார்கள். பல காலங்கள் இருந்த வீட்டிலிருந்து புது வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுக் கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அழைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்குத் தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.

சிம்ம ராசி
சிம்ம ராசி

இனி நாலுகாசு கையில் தங்கும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இனி ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். 29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப்பயிற்சியும் இருக்கட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு