சனிப்பெயர்ச்சி... சிம்மராசிக்காரர்களுக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்!

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு சிம்ம ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...
27.12.2020 முதல் 27.12.2021 வரை
சிம்மராசிக்காரர்களே, உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்லும் இக்கால கட்டத்தில் நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். எதிர்த்தவர்கள் வீழ்வார்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்விகச் சொத்துச் சிக்கல்கள் தீரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் நெஞ்சுவலி, முதுகுத் தண்டில் வலி வரக்கூடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை
உங்களின் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். பழைய கோயில்களைப் புதுப்பிப்பீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, ஏமாற்றம், துரோகங்களைச் சந்திக்க நேரிடும்.
27.01.2023 முதல் 19.12.2023 வரை
உங்களின் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகங்கள், சொத்து சேர்க்கை உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும்.

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் இக்கால கட்டத்தில் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும். சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.