Published:Updated:

4 -ல் சனி... துலாமுக்கு எப்படி? - துலாம் ராசிக்காரர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

சனிப்பெயர்ச்சி... துலாம்
சனிப்பெயர்ச்சி... துலாம்

சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்கிறார். குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நியாயத்துக்கு குரல்கொடுத்து அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துலாராசி அன்பர்களுக்கு இதுவரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களையும் மதிப்பு, மரியாதையும் தந்து கொண்டிருந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை சுக வீடான 4 - ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கத் தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். ஏனென்றால் சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்கிறார். குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

சனி பகவான்
சனி பகவான்

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடிப் பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். கழிவுநீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாள்கள் பிரச்சனையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வறுத்த, பொரித்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். புளி ஏப்பம், அல்சர் வரக்கூடும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 5 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். பூர்விகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும். கர்ப்பிணிகள் தங்கள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி பல சோதனைகளின் மூலம் உங்களின் உள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து சாதிக்கச் செய்யும் பெயர்ச்சியாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு