Published:Updated:

சனிப்பெயர்ச்சி... துலாம் ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், துலாம் ராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...

சனிபகவான் இருக்கும் இடத்தைவைத்துப் பலன் தருவதுபோல அவர் பார்க்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டும் பலன்கள் வழங்குவார். பொதுவாக சனிபகவான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். அந்த வகையில் 10 ம் பார்வையாக உங்கள் ராசியையே சனிபகவான் பார்க்கிறார். சனி பகவான் உச்சம் அடையும் வீடு துலாம் என்பதால் அவர் பார்வையினால் பெரிய கெடுதல்கள் வராது என்றாலும் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படலாம்.

துலாம் -
துலாம் -

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதைத் தவிருங்கள்.

சனிபகவான் உங்களின் 6 -ம் வீட்டை பார்ப்பது மிகவும் நல்ல அம்சமாகும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

சனிபகவான்
சனிபகவான்

சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியில் பகவானின் பார்வை உங்களுக்கு சாதகமாகவே அமைகிறது.

அடுத்த கட்டுரைக்கு