Published:Updated:

துலாம் ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் தாயாருடனும், தாய்வழி உறவிர்களுடனும் மனஸ்தாபங்கள் வந்து போகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் போக்கைக் கண்காணியுங்கள். உங்களின் நடத்தை குணங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எதிலும் புதுமையை விரும்பும் துலாராசிப் பெண்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் அமர்ந்து, தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த சனிபகவான் இப்போது சுகவீடான 4 - ம் வீட்டில் 27.12.2020 முதல் 19.12.2023 வரை வந்தமர்வதால் அர்த்தாஷ்டமச் சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனிபகவான் ஆட்சிப் பெற்று அமரப் போகிறார். அவர் 4 - வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக் கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.

சனிபகவான்
சனிபகவான்

வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் தாயாருடனும், தாய்வழி உறவிர்களுடனும் மனஸ்தாபங்கள் வந்து போகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் போக்கைக் கண்காணியுங்கள். உங்களின் நடத்தை குணங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேறு வேலை மாறுவீர்கள். குடும்பத்திலும் வேலைச்சுமை கூடும்.

வியாபாரம் செய்யும் பெண்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாள்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவதை விட விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புது கிளைகள் தொடங்குவதைப் பற்றி கணவருடனும் ஆலோசனை கேட்டு யோசித்து முடிவெடுங்கள்.

துலாம்
துலாம்

உத்தியோகம் பார்க்கும் பெண்களின் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி விமர்சனம் வேண்டாம். இடமாற்றம் உண்டு. கலைத்துறைப் பெண்கள் பற்றிய விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கும் அதைப் பெரிதாக்க வேண்டாம். இதனால் உங்கள் வளர்ச்சி தடைபடாது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி நல்லது கெட்டது என அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு