Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கன்னி ராசி நேயர்களுக்கான சனிபகவானின் பார்வைப் பலன்கள்!

கிரகம்
கிரகம்

சனிபகவான் சஞ்சரிக்கும் வீடுகளுக்கு ஏற்பப் பலன் கொடுப்பதைப் போல சனிபகவானின் பார்வை விழும் வீடுகளைக் கணக்கிட்டும் பலன்கள் சொல்லலாம். அவ்வாறு இந்தப் பெயர்ச்சியில், கன்னிராசிக்காரர்களுக்கான சனிபகவானின் பார்வை பலன்கள் இதோ உங்களுக்காக...

உங்கள் ராசிக்கு 4 ம் வீடான தனுசு ராசியிலிருந்து 5 ம் வீடான மகரராசிக்குச் சென்று அங்கே ஆட்சி பலம் பெற்று அமர இருக்கிறார் சனிபகவான். தன் ஸ்தானத்தினாலும் பார்வையினாலும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுப் பலன் அளிக்க இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2,7,11 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்கிறார்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இரண்டாம் வீடான வாக்குஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை. இடம்,பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அவஸ்தைப் படுவீர்கள். எனவே, யோசித்துப் பின் பேசுவதை இந்தக் காலகட்டத்தில் தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். கண்ணைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம் - பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சிலசமயங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். ஆகவே அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

சனிபகவான் உங்களின் 7 - ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.

பணம்
பணம்
representational image

சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார். மார்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு