Published:Updated:

சனிப்பெயர்ச்சி... கன்னிராசிக்காரர்களுக்கான சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரபலன்கள்!

சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்
சனிப்பெயர்ச்சி நட்சத்திர சஞ்சார பலன்கள்

சனிபகவான் பெயர்ச்சியாகும் ராசியில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும்போது அதற்கேற்ப தனித்துவமான பலன்களைத் தருவார். அவ்வாறு கன்னி ராசிக்காரர்களுக்கான நட்சத்திர சஞ்சார பலன்கள் இதோ உங்களுக்காக...

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் காரியத்தடையும், அலைச்சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். குடும்பத்திலும் பிரச்னைகள் வந்து போகும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திடீர் யோகம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும்.

கன்னி
கன்னி

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். ஆனால் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு வீண்பழி, சிறு விபத்து, பொருள் இழப்பு, உடல் நலக்குறைகள் ஏற்படலாம். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து உறவினர்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் திருதிய, அட்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பைச் சந்திக்க நேரிடும். பூர்விகச் சொத்துப் பிரச்சனைகள் வரும். உடன்பிறந்தவர்களுக்கிடையே கருத்துமோதல்களும் அதிகரிக்கும்.

சனி பகவான்
சனி பகவான்

இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் பழைய பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்வீர்கள்.

அடுத்த கட்டுரைக்கு