Published:Updated:

கன்னிராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

இதுவரை 4 ம் இடத்தில் அர்த்தாஸ்டம சனியாக இருந்தவர் 5ம் இடத்துக்கு மாறி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதுவரை மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க நேரிட்டதே, இனி அந்த நிலை மாறும்.

பணவரவில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். 5 ம் இடத்துக்கு வரும் சனிபகவானால் தேவையான பணம் தங்கு தடையின்றிக் கிடைக்கும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாள்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரம்
வியாபாரம்

விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

வரும் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. இதுவரை 4 ம் இடத்தில் அர்த்திராஸ்டம சனியாக இருந்தவர் 5ம் இடத்துக்கு மாறி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதுவரை மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க நேரிட்டதே, இனி அந்த நிலை மாறும். உங்கள் திறமையை குறைத்து எடைப்போட்டார்களே... இனி அதிகாரிகளே ஆச்சர்யப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள். சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள்.

மங்கள சனி பகவான்
மங்கள சனி பகவான்

கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறைமாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலைக் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு