Published:Updated:

கன்னிராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

கன்னி ராசி... சனிப்பெயர்ச்சி
கன்னி ராசி... சனிப்பெயர்ச்சி

உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் 5 - ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோ பலம் அதிகரிக்கும். சோகமான முகம் மலரும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் குழப்பம், பணப்புழக்கம் குறைந்த நிலை, அவையெல்லாம் இனி மாறும்.

சனி பகவான்
சனி பகவான்

இனி உங்கள் கை ஓங்கும். கணவரின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். உங்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனசு வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் பேசுவார்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. நாத்தனார், மச்சினர், மாமியார் தொந்தரவுகள் குறையும். இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி பேசுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.

சனிபகவான் உங்களின் 7&ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். ஆனால் சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர் பாசமாக நடந்து கொள்வார்.

வியாபாரம் செய்யும் பெண்களுக்கு இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும்.வியாபாரம் அமோகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். வியாபார ரீதியான வழக்குகளின் நல்ல தீர்ப்பு வரும்.

சனி பகவான்
சனி பகவான்

உத்தியோகம் பார்க்கும் பெண்களைத் தவறாகப் பேசியவர்களெல்லாம் இப்போது தேடிவந்து மன்னிப்புக்கேட்பார்கள். பாராட்டுகள் குவியும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்ப்பார்த்ததைபோலக் கிடைக்கும். கலைத்துறைப் பெண்களின் வளர்ச்சிக்கு இருந்து வந்த தடைகளெல்லாம் விலகி இனி புகழடைவீர்கள். இந்த சனி மாற்றம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.

அடுத்த கட்டுரைக்கு